தவ ஞான வேள்வி

Posted on
மாணிக்கவாசகர் அருளிய ஞானத்தாழிசை-1 வது பாடல் 
சுழியாகிய முனைகண்டபின் உற்றா ருறவற்றாய்
சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்
வழியாகிய துறைகண்டபின் அனுட்டானமு மாற்றாய்
வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய்
விழியாகிய மலர் கண்டபின் உயரர்ச்சினை யற்றாய்
மெய்ந் நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய்
அழியாப்பதி குடியேறிநை அச்சம்பல வற்றாய்
யாரொப்பவர் நிலயுற்றவர் அலைவற்றிரு மனமே

ஞானத்தாழிசை 2‏

நெஞ்சிற்பொருளாடிக்கண்டபின்  நெஞ்சிற்பகையற்றாய்   
நேசத்தோடு பார்மங்கையர் மேலும் நினைவற்றாய்
முஞ்சிச்சொலு முரையாண்மையும் வீம்பும் இடும்பற்றாய்
விரதங்களும் வேதங்களும் வீணாக மறந்தாய்
அஞ்சும் உடலாய்க்கண்டபின்  ஆசைத்தொடர்பற்றாய்
ஆருந்திருக்கோயில் சிவம் அதுவும்தனில் உற்றாய்
தஞ்சம்எனும் ஞானக்கடல் மூழ்கிந்திற மாகித்
தாள்சேர்ந்தனை குறைவேதினி சலியாதிரு மனமே . 
ஞானத்தாழிசை 2
கருத்து:
புருவ மத்தியில் பரம் பொருளை அனுபவித்தபின் பகையில்லை , காமமில்லை ,ஆணவமும்
வீம்பும் கருகிவிடுகின்றன. வாயால் சொல்லி கையால் , தலையால் வணங்குகின்ற மந்திரங்களும்
வேத பாராயணங்களும் ,சடங்குகளும் வீண் எனும் தெளிவு ஏற்படுகின்றது. பிராணன் உள்ளே 
அடங்கினால் 
ஐந்து பூதங்களும் தனக்குள் அடங்குகின்றன, ஆசைத்தொடர்பு அற்றுவிடுகின்றது. ஞானசாகரத்தில் 
மூழ்கி  நிற்கும்
மனத்திற்கு  ஏது சலிப்பு?
                         தட்டுங்கள் திறக்கப்படும் …..இங்கே மாணிக்கவாசகர் கூறுவது  இறைவனுடன் 
இரண்டறக்கலக்கும் மனத்தை..
மீண்டும் தாழிசை மூன்றில் சங்கமிப்போம்…. 

3 responses »

  1. சந்தைப் படிப்பு எது ! சொந்தப் படிப்பு எது ?

    மனிதனை திருத்த உலகில் எத்தனை நூல்கள்!

    உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை மனிதரகளை திருத்த எண்ணில் அடங்காத அறிவு நூல்கள் எழுதி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் .இன்று வரை மக்கள் திருந்தியதாக தெரியவில்லை .ஏன் ?எழுதியவர்கள் குற்றமா ?எழுதிய கருத்துக்கள் குற்றமா ?மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லையா?அவற்றை ஏற்றுக் கொள்ளும் அளவிர்க்கு மக்களுக்கு தெளிவு இல்லையா ? ஒண்ணுமே புரியவில்லை .உண்மையிலே மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் யாரோ சொல்லியதை யாரோ எழுதி வைத்தியதை பார்த்து படித்து பதிய வைத்ததையே வாந்தி எடுத்துக் கொண்டு உள்ளார்கள் .

    அதனால் மக்கள் மனதையும் அறிவையும் மாற்ற முடிய வில்லை ஏன் என்றால் இவர்கள் சொல்லிய கருத்துக்கள் யாவும் அவர்களுக்கும் தெரியும் இந்த உலகத்தில் இல்லாத எந்த கருத்துகளும் புதியவை அல்ல அரைத்தையே அரைத்துக் கொண்டு உள்ளார்கள் .ஒரே கருத்து வேறு வேறு கோணங்களில் மக்களுக்கு பதிவு செய்கிறார்கள் .அதனால் மக்களை நல்வழிப் படுத்தும் உண்மையான கருத்துக்கள் சொல்லும் தகுதி யாருக்கும் இல்லை .

    மக்கள் சமுதாயத்திற்கு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று முதன் முதலில் அறிவு நுல் எழுதி வைத்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று பதிவு செய்து வைத்தார்களே !அவர்கள் செய்த அறியாமை களாகும் .அவர்கள் உண்மையைச சொல்லி இருந்தால் மக்களும் உண்மையை அறிந்து அதன்படி வாழ்ந்திருப்பார்கள் .உண்மையை மறைத்து குழித் தோண்டி புதைத்து விட்டார்கள் .

    அதற்கு பின்னாடி வந்த பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களும் ,முத்தர்களும் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் முன்னுக்கு பின் முரணாகவே சொல்லி வைத்து விட்டார்கள் .அவர்களை பின் பற்றி வந்த மனிதர்கள் அவரவர் பின் பற்றும் கருத்துகள் தான உயர்ந்தது என்றும் உண்மை எது என்று தெரியாமல் புரியாமல் அறியாமல் போட்டிப் பொறாமை பேதம் கொண்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்

    அன்று முதல் இன்று வரை இதுதான் நடந்து கொண்டு வருகின்றன.இனி மக்கள் என்ன செய்ய வேண்டும் .எல்லா மனிதர்களுக்கும் இந்திரியம் கரணம் ஜீவன் ஆன்மா என்னும் அமைப்புகள் மனிதனுடைய உடம்பில் வைக்கப் பட்டு உள்ளன,இவற்றை படிப்பால் அறிய வேண்டியது இல்லை எல்லாம் இறைவனால் கொடுக்கப் பட்டது

    இவற்றை அறிந்து கொள்ள ஒழுக்கம் தான் தேவைப் படுகிறது அந்த ஒழுக்கம் எது என்றால் இந்திரிய ஒழுக்கம்,காரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் .என்பதாகும் .இந்த ஒழுக்கம் தெரிந்து கொள்ள அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, தயவு, கருணை என்னும் இரக்கத்தை வர வழைத்துக் கொள்ள வேண்டும் .அப்படி வர வழைத்துக் கொள்ள படிப்பு அறிவு தேவை இல்லை ,

    கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
    காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே
    வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
    மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
    நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே
    நரர் களுக்கும் சுரர் களுக்கும் நலம் கொடுக்கும் நலமே
    எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே
    என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே !

    அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் அறிவு உண்டானால் அருள் உண்டாகும் அருள் உண்டானால் அனைத்து உண்மைகளும் தன்னைத் தானே தெரியவரும் .அப்போது மனிதன் மனிதனாக வாழ்ந்து கடவுள் நிலை அறிந்து அம் மயமாகலாம் இதுவே இறை நிலையை அடையும் உண்மையான வழியாகும்

    அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
    அனுபவமாகின்றது
    செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
    திருவருள் உருவம்

    அதனால் அருளைப் படிப்பால் அறிய வேண்டியது இல்லை உலகியல் படிப்பு சந்தைப் படிப்பு ,நம் சொந்தப் படிப்பு ஒழுக்கம் தான் என்பதை உணர்ந்து உண்மையை அறிந்து உயர்ந்த நிலையை அடைவோம் .

    ஒரு உண்மைப் பாடல் ;–

    கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
    கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
    உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
    உலகிலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
    விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
    மெய் நெறியைக் கடைப் பிடித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து
    எண்டகு சிற்றம் அமபலத்தே என் தந்தை அருள் அடைமின்
    இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

    உங்கள் அன்புள்ள ஆன்மநேயன் ;–கதிர்வேலு
    Download: eType1.com/f.php?F3CT28

    Reply
    • http://sagakalvi.blogspot.in/2014/07/pdf_25.html

      ஞான நூல்கள் – PDF
      மெய் ஞானம் என்றால் என்ன?
      இறைவன் திருவடி எங்கு உள்ளது?
      ஞானம் பெற வழி என்ன?
      வினை திரை எங்கு உள்ளது?
      வினை நம் உடலில் எங்கு உள்ளது?
      வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
      ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
      சும்மா இரு – இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
      மனம் எங்கு உள்ளது?

      ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய ஞான நூற்களை படித்து தெளிவு பெறவும்

      திருஅருட்பாமாலை 3 — PDF
      திருஅருட்பாமாலை 2 — PDF
      திருவாசக மாலை — PDF
      திருஅருட்பாமாலை 1 — PDF
      ஞானக்கடல் பீர் முகமது — PDF
      மூவர் உணர்ந்த முக்கண் — PDF
      ஞானம் பெற விழி — PDF
      மந்திர மணிமாலை(திருமந்திரம்) — PDF
      கண்மணிமாலை — PDF
      அருள் மணிமாலை — PDF
      சாகாக்கல்வி – PDF
      வள்ளல் யார் – PDF
      உலக குரு – வள்ளலார் – PDF
      திருஅருட்பா நாலாஞ்சாறு
      சனாதன தர்மம்
      பரம பதம் – எட்டு எழுத்து மந்திரம் அ
      ஜோதி ஐக்கு அந்தாதி
      அகர உகர மாலை
      ஞான மணிமாலை
      ஆன்மநேய ஒருமைப்பாடு
      ஜீவகாருண்யம்
      ஸ்ரீ பகவதி அந்தாதி
      அஷ்டமணிமாலை
      திருஅருட்பா தேன்

      Reply
  2. ஐயா,
    சந்தையில் விற்ப்பது எது வாங்குவது எது என்று தெரியாமலேயே மூச்சு முட்ட இப்படி வாங்கி இருக்கிறீர்கள்.
    ஐயா அடியேன் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் , இங்கே நாங்கள் எழுத இருப்பது மாணிக்கவாசகரின் ”ஞானத்தாழிசை” என்று…. இதில் சந்தைப் படிப்பு ….சொந்த்தப் படிப்பு …….எங்கே ஐயா இதை எல்லாம் படித்தீர்கள்………சரி அதை விடுங்கள் , நீங்கள் மேலே குறிப்பிட்ட இத்தனை அறிவையும் எந்த சந்தையில் ஐயா சுட்டீர்கள் …….. ஐயா கீழே உள்ளது தங்கள் குறிப்பில் ஒன்று…தயவு செய்து தாங்களே இதனை மீண்டும் ஒருமுறை ……..முடிந்தால் … படித்து விட்டு ஒரு சில உதாரணங்களுடன் விளங்கப் படுத்துங்கள் .

    பெரியவர் யார்???????????????
    முத்தர் யார்????????????
    சித்தர் யார்????????????????
    யோகி யார்??????????????
    ஞானி யார்?????????????????
    ”அதற்கு பின்னாடி வந்த பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களும் ,முத்தர்களும் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் முன்னுக்கு பின் முரணாகவே சொல்லி வைத்து விட்டார்கள் .அவர்களை பின் பற்றி வந்த மனிதர்கள் அவரவர் பின் பற்றும் கருத்துகள் தான உயர்ந்தது என்றும் உண்மை எது என்று தெரியாமல் புரியாமல் அறியாமல் போட்டிப் பொறாமை பேதம் கொண்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்”

    ஐயா ஞானத்தாழிசக்கு பிள்ளையார் சுழி போடும் போதே , நீங்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டீர்களே……இதில் நீங்கள்…..பெரியவரா??????????????முத்தரா??????????????சித்தரா?????????????????யோகியா???????????????ஞானியா????????????????? அல்லது நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளது போல் தெரியாமல் , புரியாமல் , அறியாமல் வந்த போட்டி? , பொறாமை?, பேதமா?

    சிறியேன் ஆகிய நான் ஏதும் பிழையாக சுட்டியிருந்தால், ஐயா எனது தாத்தன் கூறியதுபோல் …

    கல்லாப் பிழையும் , கருதாப் பிழையும்

    கசித்துருகி நில்லாப் பிழையும் , நினயாப் பிழையும்

    நின் நெஞ்செழுத்தை சொல்லாப் பிழையும்

    துதியாப் பிழையும் , தொழாப் பிழையும்

    எல்லாப் பிழையும் பொறுத் தருள்வாய் கச்சியேகம்பனே…..

    Reply

Leave a comment