விடியலுக்கில்லைத் தூரம்

இப்படியும் பார்க்கலாம், இதுதான் ஆதங்கம் !

ஆமாம் பலகோடி ஆன்மாக்களின் தோல்வியில் தான்  நாம் ஒவ்வொருவரினதும் வாழ்வு மலர்ந்தது !

மட்டுமல்லாமல் பலகோடி தோல்விகளுக்குப் பின்னரே இந்த வாழ்வு அமைந்தது   !
வாழ்வின் உலகச் சுமைகளைப் பார்த்து சுகங்களைத் தவற விட்டு, தாயாகிய அன்னை பராசக்தியின் கனவாகிய சிவனை (சிவாக்கினி ,மூலாக்கினியை)மிதிக்கலாமா ?
பல்வேறு உயிர்களினூடு இன்பத்தைப் பெறுகின்ற உரிமையையும் இழந்தோம் ;பல்வேறு உயிர்களின் உடல்களைப் பாவிப்பதற்கு ஏதுவான வினைகளையும் இழந்தோம் !இவற்றை மீளப் பெறத்தக்க உள்ளுணர்வை இழக்கலாமா ?
உயிருக்கு இன்பத்தைத் தருகின்ற உள்ளுணர்வைத் தூண்டுகின்ற மனதின் நினைவுகளான கனவை மறக்கலாமா ?
ஆணவ மாய இருட்டின் விடியலுக்கில்லை தூரம் ! ஒருபகுதி மக்களுக்கு விடிந்தும்இன்னும் மனதில் பாரம் இருக்கிறது !
வீரியமானது அனாகதமாகிய நெஞ்சு வரை எழுந்து சந்தேக இருட்டை விலக்கி விசுவாச ஒளி பரவுவதால் ஆனந்தப் பரவசக் கண்ணீர் வழிகிறது !
வாழ்கையின் சூட்சுமம் புரியாமல் மனித இனங்களுக்குள் யுத்தங்கள் தோன்றினாலும்  ,ரத்தங்கள் சிந்தினாலும்,உயிர்களின் அடிப்படையான அன்பு, இன்பம் ஆகிய பாதை மாறலாமா ?
ரத்தத்தில் எழுகின்ற மூலக்கனலாகிய வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் !
இன்பம், இன்பம், இன்பம் என்ற கொள்கை சாகலாமா ?

Leave a comment